இந்தியா

’எதுக்கு காசு கொடுத்து வாங்கிட்டு’.. திருடர்களின் செயலால் மிரண்டு போன கேரள போலிஸ்: நடந்தது என்ன?

கேரளாவில் புது வீட்டுக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு திருடிய திருடர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

’எதுக்கு காசு கொடுத்து வாங்கிட்டு’.. திருடர்களின் செயலால் மிரண்டு போன கேரள போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் கடந்த 1ம் தேதி சோப்பு, சீப்பு, கண்ணாடி, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடுபோயுள்ளது.

மேலும் கடையிலிருந்த ரூ.80 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து கடையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

’எதுக்கு காசு கொடுத்து வாங்கிட்டு’.. திருடர்களின் செயலால் மிரண்டு போன கேரள போலிஸ்: நடந்தது என்ன?

இதையடுத்து பறவூர் பகுதியைச் சேர்ந்த அருண், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆரிப், விஜீஸ் ஆகிய 3 பேர்தான் கடையில் திருடியது என தெரியவந்தது. பிறகு போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தபோது விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்ததுள்ளது.

இந்த மூன்று பேரும் புதிதாக வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் திருடுவது என முடிவு செய்துள்ளனர்.

’எதுக்கு காசு கொடுத்து வாங்கிட்டு’.. திருடர்களின் செயலால் மிரண்டு போன கேரள போலிஸ்: நடந்தது என்ன?

இந்த முடிவை அடுத்து மூன்று பேரும் சேர்ந்து அந்த கடையில் நுழைந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைத் திருடிச் சென்றதாக போலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்களைக் கடையில் திருடிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories