இந்தியா

பக்கத்து வீட்டு நாய் குரைத்ததால் ஆத்திரம்.. நாய் உரிமையாளரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபர்!

நாய் தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த நபர் நாயின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பக்கத்து வீட்டு நாய் குரைத்ததால் ஆத்திரம்.. நாய் உரிமையாளரை  இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹார் என்ற பகுதியில் ரக்ஷித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் தரம்வீர் தஹியா என்பவர் அதிகாலையில் அந்த பகுதியில் உலா வந்துள்ளார்.

அப்போது ரக்ஷித் வளர்க்கும் நாய், தரம்வீர் தஹியாவை பார்த்து குரைத்துள்ளது. நாய் தன்னை நோக்கி குரைத்ததால் ஆத்திரம் அடைந்த ரக்ஷித் நாயின் வாலைப் பிடித்துத் தள்ளி அதை அடித்துள்ளார்.

பக்கத்து வீட்டு நாய் குரைத்ததால் ஆத்திரம்.. நாய் உரிமையாளரை  இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபர்!

தனது வளர்ப்பு நாயை பக்கத்து வீட்டுகாரர் அடித்ததை பார்த்த ரக்ஷித் அதை தடுக்க வந்துள்ளார். இதனால் இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த தரம்வீர் தஹியா, ரக்ஷித்தையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் கம்பியால் தாக்கியுள்ளார். மேலும் இதை தடுக்க வந்த தனது மற்ற அண்டை வீட்டுக்காரரான 53 வயதுடைய நபரையும் தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகிய நிலையில் அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சியில் தரம்வீர் தஹியா 3 பேரை தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories