இந்தியா

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. நள்ளிரவில் பரபரப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் திடீரென தீபிடித்ததால் பயணிகள் அலறியடித்து ரயிலை நிறுத்தினர்.

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. நள்ளிரவில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் தக்க்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானா மாநிலம் பகிடிப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டிருந்த பெட்டியில் திடீரென்று தீப்பற்றியது.

பின்னர் தீ வேகமாக எரிய துவங்கியதும் இதை பார்த்த பயணிகள் சிலர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. நள்ளிரவில் பரபரப்பு!

இதைத் தொடர்ந்து ரயில் நின்றதும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தகவலில் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் லக்கேஜ் பெட்டியில் பொருள்கள் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகின.

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்.. நள்ளிரவில் பரபரப்பு!

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை என போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீ அணைக்கப்பட்ட பின்னர் தக்க்ஷன எக்ஸ்பிரஸ் அங்கிருந்த கிளம்பி சென்றது.

banner

Related Stories

Related Stories