இந்தியா

’இது நாங்கள் சொன்ன GST இல்லை.. BJP விஷயம் தெரியாமல் செய்திருக்கிறது’ - ப.சி. காட்டம் !

GST அமலுக்கு வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பா.ஜ.க கொண்டு வந்த GST பயனற்றது என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

’இது நாங்கள் சொன்ன GST இல்லை.. BJP விஷயம் தெரியாமல் செய்திருக்கிறது’ - ப.சி. காட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பல்வேறு மாநிலங்களை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்த மக்களுக்கு ஏற்ப சட்டங்கள் அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. அந்தந்த மாநில மக்களுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகள் வரி விதித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் மாநில உரிமைகள் மீது கைவைத்தது. மாநிலங்களுக்கு மாநில அரசுகள் விதித்து வந்த பல்வேறு வரிகளை நீக்கிவிட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரியான சரக்கு மற்றும் சேவை வரி எனச் சொல்லப்படும் GST-ஐ கொண்டு வந்தது.

’இது நாங்கள் சொன்ன GST இல்லை.. BJP விஷயம் தெரியாமல் செய்திருக்கிறது’ - ப.சி. காட்டம் !

இந்த நிலையில், GST கொண்டு வந்து இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவடைகிறது. 101-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி. வரி நாடுமுழுவதும் அமலுக்கு வந்தது. தற்போது 6 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் GST-ஐ குறித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த 5 ஆண்டுகளில், GST குறைபாடுகள் மிகவும் மோசமாகி விட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு பா.ஜ.க. பொறுப்பேற்றவுடன் கொண்டு வந்த ஜி.எஸ்.டி. முறை மிகவும் தவறானது. இந்த ஜி.எஸ்.டி. முறையானது, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி. அல்ல.

’இது நாங்கள் சொன்ன GST இல்லை.. BJP விஷயம் தெரியாமல் செய்திருக்கிறது’ - ப.சி. காட்டம் !

இப்போதைய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யானது வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான நம்பிக்கையை இது முற்றிலும் சிதைத்து விட்டது." என்று காட்டமாக விமர்சித்தார்,

தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டி.யை நிராகரிக்கிறது. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஜி.எஸ்.டி. முறையை குறைந்த விகிதத்தில் இருக்கும்படியான ஜி.எஸ்.டி. 2.0 ஆக மாற்றியமைக்க முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், " காங்கிரஸ் கொண்டுவந்த எளிமையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மக்களை கொள்ளையடிக்கும் திட்டமாக பா.ஜ.க. மாற்றிவிட்டது. 1,826 நாட்களில் 6 விதமான வரி விகிதங்கள், 1000-க்கும் மேற்பட்ட மாற்றங்கள். எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. தற்போது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் கெட்ட கனவாகிவிட்டது. காங்கிரஸ் ஆட்சி ஏற்படும்போது தொழிற்வளர்ச்சியை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், திருத்தும் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. 2.O அமலுக்கு வரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

banner

Related Stories

Related Stories