இந்தியா

காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!

காதலியை திருமணம் செய்து கொள்வதற்காகப் பெண் ஒருவர் ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காதலித்து வந்துள்ளனர். தன்பாலின காதலர்களான இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், இவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேரில் ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!

இந்த முடிவை அடுத்து, அந்த பெண் பிரயாக்ராஜியில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மோஹித் ஜெயின் கூறுகையில், "இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இங்கு நடைபெறுவது இதுவே முதல் முறை. 18 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் முழு ஆணாக மாறியிருப்பார். தற்போது அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!

எத்தனையோ துறைகளில் சாதனை படைத்து வந்தாலும் இன்னும் இந்த சமூகத்தில் தன்பாலின காதலர்களை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெறுக்கவே செய்து வருகிறோம். இந்த நிலைமாற வேண்டும் என்றால் மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான விழிப்புணர் அதிகமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories