இந்தியா

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்ப்பு.!

பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் நிரபராதி என 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்ப்பு.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கடந்த 2000ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதன்பின்னர் சிறார் பள்ளியிலும் அவர் சேர்க்கப்பட்டார்.

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்ப்பு.!

இந்த வழக்கில் அவர் ஜாமின் பெற்று வெளிவந்தார். ஆனால் இந்த வழக்கு தொடர்ந்து நடந்துவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் அந்த சிறுவன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இப்போது அந்த சிறுவனுக்கு 38 வயது ஆகிறது. கடந்த 22 ஆண்டுகளாக பல்வேறு அவமானங்கள், கஷ்டங்களை சந்தித்த அவர், தற்போது நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன்.. 22 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்ப்பு.!

இந்த நிலையில் இது குறித்து கூறியுள்ள அவர், நான் செய்யாத குற்றத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டேன், இந்த களங்கம் இத்தனை ஆண்டுகள் எனக்கும், என் குடும்பத்திற்கும் கஷ்டத்தையும், வலியையும், அவமானத்தையும் கொடுத்தது. ஆனால், நான் செய்யாத குற்றத்திற்காக என்மீது விழுந்த பழி இத்தோடு நீக்கப்பட்டுவிட்டது. இருபிரிவினருக்கு இடையேயான நிலத் தகராறில் நான் இந்த பிரச்னையில் இழுத்துவிடப்பட்டேன்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories