இந்தியா

அக்னிபாத் திட்டம் மோடி எடுத்த பெரிய ரிஸ்க்.. திரும்ப முடியாத சிக்கலில் பா.ஜ.க அரசு : அஜித் தோவல் சூசகம்!

அக்னிபாத் வீரர்கள் ஒருபோதும் முழு ராணுவ வீரர்களாக ஆக்க மாட்டார்கள் என அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டம் மோடி எடுத்த பெரிய ரிஸ்க்.. திரும்ப முடியாத சிக்கலில் பா.ஜ.க அரசு : அஜித் தோவல் சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களைச் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

அக்னிபாத் திட்டம் மோடி எடுத்த பெரிய ரிஸ்க்.. திரும்ப முடியாத சிக்கலில் பா.ஜ.க அரசு : அஜித் தோவல் சூசகம்!

மேலும் தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கும் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பா.ஜ.க தலைவர்களோ அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும், முடித்திருத்துதல், துணி துவைத்தல் போன்ற திறன் பயிற்சிகள் அளிக்கப்படும் என போராடி வரும் இளைஞர்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

அக்னிபாத் திட்டம் மோடி எடுத்த பெரிய ரிஸ்க்.. திரும்ப முடியாத சிக்கலில் பா.ஜ.க அரசு : அஜித் தோவல் சூசகம்!

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திரமோடி பெரிய ரிஸ்க் எடுத்துள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டம் குறித்து ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், "அக்னிபாத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 2014ம் ஆண்டு பிரதமரா நரேந்திர மோடி பதவியேற்றபோதே இந்தியாவை எவ்வாறு வலுவாக பாதுகாப்பது என அவர் தொடர்ந்து திட்டமிட்டே வந்துள்ளார். இதில் ஒன்றுதான் அக்னிபாத் திட்டம். தேச நலனுக்காக அரசியல் இழப்புகளைச் சந்திக்கத் தயாராக உள்ளார்.

அக்னிபாத் திட்டம் மோடி எடுத்த பெரிய ரிஸ்க்.. திரும்ப முடியாத சிக்கலில் பா.ஜ.க அரசு : அஜித் தோவல் சூசகம்!

அக்னிபாத் வீரர்கள் ஒருபோதும் முழு ராணுவ வீரர்களாக ஆக்க மாட்டார்கள். அவர்கள் பயிற்சி முடிந்ததும் திருப்பி அனுப்பப்படுவார்கள். அதேபோல் வழக்கமான படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து நீடிக்கவே செய்யும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories