இந்தியா

ராணுவத்துக்கு ஓய்வூதியம் கொடுக்காத மோடி ரூ.8500 கோடிக்கு விமானம் வாங்கியது ஏன்? : காங். சரமாரி கேள்வி!

ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை குறைப்பதாக ஒன்றிய அரசு கூறினால் பிரதமருக்காக ரூ.8,500 கோடி மதிப்பில் விமானம் வாங்கியது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ராணுவத்துக்கு ஓய்வூதியம் கொடுக்காத மோடி ரூ.8500 கோடிக்கு விமானம் வாங்கியது ஏன்? : காங். சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களைச் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.மேலும் தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.

ராணுவத்துக்கு ஓய்வூதியம் கொடுக்காத மோடி ரூ.8500 கோடிக்கு விமானம் வாங்கியது ஏன்? : காங். சரமாரி கேள்வி!

இந்த திட்டம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனிடையே டெல்லியில் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் பலர் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

ராணுவத்துக்கு ஓய்வூதியம் கொடுக்காத மோடி ரூ.8500 கோடிக்கு விமானம் வாங்கியது ஏன்? : காங். சரமாரி கேள்வி!

இந்த போராட்டத்தின்போது பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், ''புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருக்க கூடாது. அந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை குறைப்பதாக ஒன்றிய அரசு கூறினால் பிரதமருக்காக ரூ.8,500 கோடி மதிப்பில் வாங்கிய இரண்டு விமானங்களையும், புதிய நாடாளுமன்றம் கட்டுவதை தவிர்த்து இருக்கலாம். இத்தகைய மாற்று வழியில் பணத்தை சேமித்து இருக்கலாம்'' என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories