இந்தியா

அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?

அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடுமுழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்து பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூரையாடி தீ வைத்ததால் பெரும் வன்முறைகாடாக அப்பகுதிகள் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் போராட்டம் தீவிரம் அடையும் அளவுக்கு இந்த திட்டத்தில் உள்ள அம்சங்கள் என்ன என்பதனைப் பார்ப்போம். அக்னிபாத் திட்டத்தின் படி இந்திய ராணுவத்தின் முப்படைகளில் சேர மொத்தம் 40,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவர்களில் 25% பேர் மட்டுமே திறமையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவர் . இதர நபர்கள் அனைவரும் 4 வருடத்துக்கு பிறகு வேலையிலிருந்து விடுவிக்கப்படுவர். இவர்களுக்கு ஓய்வூதியும் உள்ளிட்ட பயன்கள் ஏதும் கிடைக்காது. ஆனால், "சேவா நிதி" எனப்படும் வெளியேறும் தொகுப்பு திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். இவர்கள் வெளியேறும் போது ரூ.11.71 இலட்சமும், திறன் சான்றிதழும் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தில் இளைஞர்கள் அதிகரித்து ராணுவம் இன்னும் இளமையாகும் என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.

அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ராணுவத்தில் சேர தயாராகிவரும் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதோடு, அனுபவ வீரர்கள் பற்றாக்குறையால் ராணுவத்தின் திறனும் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ராணுவ பயிற்சி பெற்ற வீரர்கள் வேலை இழந்து வெளியே வரும்போது, அதில் சிலர் தவறான நபர்களின் கரங்களில் சிக்கினால், அது சமூகத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?

ஆனால், இது பொன்ற எந்த அசம்பாவிதமும் நடக்காது என ஒன்றிய அரசின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த திட்டத்தின் படி முதல் ஆண்டில் சேர்க்கப்படும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிவு செய்யப்படும் 25% அக்னிவீர்கள் பல முறை சோதிக்கப்பட்டே பணி நீட்டிப்பு பெறுவார்கள் எனவும், இதில் வெளியேறும் நபர்களால் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் அரசு சார்பானவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இது வரை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிவர்களால் இது வரை எந்த பாதிப்பும் எழவில்லை எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இது தவிர ராணுவத்தில் இத்தகைய குறுகிய கால பணியமர்த்தும் முறை பெரும்பாலான நாடுகளில் செயல்பாட்டில் இருப்பதாகவும் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஆயுதப்படைகளில் 50% இளைஞர்கள் 50% அனுபவசாலிகள் என்ற சரியான கலவை கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது.

அக்னிபாத் திட்டத்தை இந்தியர்கள் எதிர்ப்பது ஏன் - ராணுவம் தனியாரிடம் சென்றால் ஏற்படும் பேரிழப்பு என்ன?

இந்த முறை நடைமுறை இருக்கும் நாடுகளில் இவ்வாறு ஒப்பந்த முறையில் பணியாற்றி வெளி வந்த வீரர்கள் பலர் தனியார் ராணுவ அமைப்பில் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். நாட்டில் நடக்கும் வன்முறையின்போதோ அல்லது பிற கலவரங்களை அடக்கும் போதோ இது போன்ற தனியார் ராணுவத்தை அரசு பணியில் அமர்த்தி வருகிறது .

மேலும் ஆப்கான் மற்றும் வளைகுடா போரின் போதும் இதே போன்ற தனியார் ராணுவத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பணியில் அமர்த்தின. இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தால் இந்தியாவிலும் இது போன்ற தனியார் ராணுவம் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories