இந்தியா

இந்தியர்களின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் குறையும்.. - சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் குறையும்.. - சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் மாசுபாடு காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். குறிப்பாக காற்று மாசுபட்டால், சுவாச கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு, காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டின் காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுளில் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் குறையும்.. - சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!

இது தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.

அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.

தற்போது இந்தியா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதால், தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களில் 1.3 பில்லியன் பேர் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள சராசரி காற்று மாசுபாட்டு அளவான 5µg/m³-ஐ விட அதிகமாக மாசடைந்த காற்றினை சுவாசிக்கின்றனர். மேலும் PM2.5 எனப்படும் அபாயகரமான நுண் துகள்கள் இந்த மாசடைந்த காற்றில் உள்ளதாகவும், இதன் மூலம் நுரையீரலில் பல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "இந்த காற்று மாசு, கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது," எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories