இந்தியா

வங்கதேசதம் To இந்தியா : முகநூல் காதலனை மணம் முடிக்க நீந்தி எல்லை கடந்த காதலி.. இறுதியில் நடந்த சோகம் !

முகநூல் காதலனை மணம் முடிக்க எல்லைக் கடந்து இந்தியாவிற்குள் இளம்பெண்ணை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வங்கதேசதம் To இந்தியா : முகநூல் காதலனை மணம் முடிக்க நீந்தி எல்லை கடந்த காதலி.. இறுதியில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வங்கதேசத்தை சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவருக்கும் இந்தியாவை சேர்ந்த அபிக் மந்தல் என்பவருடன் முகநூலில் அறிமுகமாகியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக கிருஷ்ணா மந்தல் இந்தியா வருவதற்கு பாஸ்போர்ட் இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், தனது காதலனை திருமணம் செய்ய கிருஷ்ணா மந்தல் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி சட்டவிரோதமாக எல்லையைத் தாண்ட முடிவு செய்த அவர், முதலில் இந்தியா மற்றும் வங்கதேச எல்லை பகுதியில் உள்ள சுந்தரவனகாட்டை வந்தடைந்து, பின்னர் அங்கிருந்து நதியில் ஒரு மணி நேரம் நீந்தி இந்தியா வந்தடைந்துள்ளார்.

இந்தியா வந்தடைந்த அந்த பெண் தனது காதலனை சந்தித்து கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் வைத்து தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். எல்லை தாண்டி இந்தியா வந்த பெண் தொடர்பான தகவல் விரைவில் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனால் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய அவரை காவல்துறையினர் கைது செய்துள்னனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் விரைவில் வங்கதேச அரசிடம் ஒப்படைக்கப்படுவார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories