இந்தியா

பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் Sorry.. Sorry என்ற வாசகம்.. பீதியை கிளப்பிய நபர்: காரணம் என்ன?

பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றின் சுவர் முழுவதும் Sorry என எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் Sorry.. Sorry என்ற வாசகம்.. பீதியை கிளப்பிய நபர்: காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூருவில் உள்ள காமாக்ஷிபல்யா பகுதியில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்று இந்த பள்ளியில் சுற்றுச்சுவர்கள் மற்றும் படிகாட்டுகள் என அனைத்து இடங்களிலும் Sorry.. Sorry என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இதைப்பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த போலிஸாரும், முழுமையாக ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் டெலிவரி பாய் வேடத்தில் இரண்டு நபர்கள் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், காதல் தோல்வியால் பள்ளி மாணவர்களே யாராவது இப்படி எழுதியுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சுவர் முழுவதும் Sorry என எழுதப்பட்டு இருந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories