இந்தியா

வழுக்கையை கண்டதும் வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்த மணப்பெண்.. பரபரப்பை கிளப்பிய மணமகனின் செயல்!

வழுக்கை தலையை விக் வைத்து மறைத்த மணமகன் திருமணத்திற்கு முன்பு வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

வழுக்கையை கண்டதும் வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்த மணப்பெண்.. பரபரப்பை கிளப்பிய மணமகனின் செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பாலா படத்தில் வருவதை போல தன்னுடைய வழுக்கை தலையை விக் வைத்து மறைத்த மணமகன் திருமணத்திற்கு முன்பு வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

பரியார் கிராமத்தைச் சேர்ந்த லகான் காஷ்யப்பின் மகள் நிஷாவிற்கும், கான்பூரைச் சேர்ந்த அஷோக் குமார் காஷ்யப்பின் மகன் பங்கஜ் என்பவருக்கு கடந்த மே 20ம் தேதி திருமணம் நடைபெற இருந்திருக்கிறது.

வழுக்கையை கண்டதும் வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்த மணப்பெண்.. பரபரப்பை கிளப்பிய மணமகனின் செயல்!

இதற்காக திருமண சடங்குகள் பெரும்பாலும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் நடப்பதற்கு சிறிதி நேரத்திற்கு முன்பு மணமகன் பங்கஜ் மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது அவரது மயக்கத்தை தெளியவைக்க உறவினர்கள் பங்கஜின் முகம் மற்றும் தலையில் தண்ணீரை தெளித்து எழுப்பியிருக்கிறார்கள்.

அப்போது பங்கஜ் தலையில் தனது வழுக்கையை மறைப்பதற்காக பொறுத்தியிருந்த விக் கழன்றிருக்கிறது. இதனைக் கண்டு மணப்பெண் உட்பட பெண் வீட்டார் அனைவரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பங்கஜ்ஜை திருமணம் செய்துக்கொள்ள நிஷா மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், மணமகனுக்கு வழுக்கை இருப்பது கடைசி வரைக்கும் பெண் வீட்டாருக்கு தெரியாமல் வைத்திருந்தால் மண்டபத்தில் பெரும் களேபரமே நடந்திருக்கிறது.

வழுக்கையை கண்டதும் வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்த மணப்பெண்.. பரபரப்பை கிளப்பிய மணமகனின் செயல்!

பையன் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் எதுவும் எடுபடாமல் போயிருக்கிறது. இதனையடுத்து கிராம பஞ்சாயத்து ஆட்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது திருமணத்துக்காக செலவழித்த 5.66 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்கும்படி பெண் வீட்டார் கேட்க, மணப்பெண்ணும் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்திருக்கிறார்.

ஒருவழியாக மணமகன் வீட்டார் பணத்தை கொடுக்க சம்மதித்த பிறகு திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் பங்கஜ் அவரது சொந்த ஊரான கான்பூருக்கு சென்றிருக்கிறார். இந்த சம்பவத்தால் திருமண வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories