இந்தியா

GST கவுன்சில் மாநிலங்களை கட்டுப்படுத்தாது.. மோடி அரசுக்கு மீண்டும் பாடம் எடுத்த உச்ச நீதிமன்றம்!

ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

GST கவுன்சில் மாநிலங்களை கட்டுப்படுத்தாது.. மோடி அரசுக்கு மீண்டும் பாடம் எடுத்த உச்ச நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்குப் பதிலாக ஒற்றை வரியாகச் சரக்கு மற்றும் சேவை (GST) வரி தற்போது நடைமுறையில் உள்ளது. இதையடுத்து, ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவைத் தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளது.

இந்த கவுன்சில்தான் வரியை கூட்டுவது, குறைப்பது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.மேலும் இந்த கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், "ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்க முடியாது.

GST கவுன்சில் மாநிலங்களை கட்டுப்படுத்தாது.. மோடி அரசுக்கு மீண்டும் பாடம் எடுத்த உச்ச நீதிமன்றம்!

ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அறிவுரைகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வழங்கலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் மாநில உரிமைகளை பரித்து, ஒன்றிய அரசு சொல்வதைத்தான் மாநில அரசுகள் செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது.

இப்படி ஒன்றிய அரசு நடந்து கொண்டால் கூட்டாட்சி தத்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் தொடர்ச்சியா பேசி வருகின்றன. இருப்பினும் பா.ஜ.க அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமே ஜி.எஸ்.டி வழக்கில் கூட்டாட்சி தத்துவம் குறித்து ஒன்றிய அரசுக்கு பாடம் எடுத்துள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories