இந்தியா

”உதட்டில் முத்தமிடுவது குற்றமல்ல”: போக்சோ குற்றவாளிக்கு ஜாமின் வழங்கி, மும்பை நீதிமன்றம் சர்ச்சை கருத்து!

முத்தமிடுவது குற்றம் இல்லை என பாலியல் வழக்கில் மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”உதட்டில் முத்தமிடுவது குற்றமல்ல”: போக்சோ குற்றவாளிக்கு ஜாமின் வழங்கி, மும்பை நீதிமன்றம் சர்ச்சை கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலியல் வழக்கில், நீதிமன்றங்கள் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களைக் கூறி கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருவது அதிகரித்து வருகிறது. மனைவியின் அனுமதியில்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டாலே குற்றம் என சட்டம் கூறும்போது, நீதிபதிகள் சில நேரங்களில் பாலியல் வழக்கில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கூட மும்மை உயர் நீதிமன்றம் உதட்டில் முத்தமிடுவதும், உடலை தீண்டுவதும் இயற்கை. இது குற்றமல்ல என கருத்துச் சொல்லியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்யைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு பீரோவில் இருந்த பணம் மாயமாகியுள்ளது. இது குறித்து அவரது தந்தை தனது மகனிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் செல்போனை ரீசார்ஜ் செய்ய பணத்தை எடுத்தாக கூறியுள்ளார்.

மேலும் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையின் உரிமையாளர் தன் உதட்டில் முத்தமிட்டதாகவும், தனது உறுப்பில் கை வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்போன் கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.

இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கேட்டு செல்போன் கடையின் உரிமையாளர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய், ஒருவரின் உதட்டில் முத்தமிடுவதும், உடலை தீண்டுவதும் இயற்கைக்குப் புறம்பான குற்றமல்ல.

மேலும் மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனவே மனுதாரர் ரூ.30 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளளலாம் என உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories