இந்தியா

“ரூ.1,800 கோடியில் சூதாட்டம்..” : பா.ஜ.க ஆட்சியில் தொடரும் சட்டவிரோத பணப் புழக்கம் - பின்னணி என்ன?

புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சியில் துணையுடன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஆண்டிற்கு ரூபாய் 1,800 கோடி அளவிற்கு சூதாட்டம் நடைபெறுவதாக அ.தி.மு.க பகிரங்கமாக குற்றம்ச்சாட்டியுள்ளது.

“ரூ.1,800 கோடியில் சூதாட்டம்..” : பா.ஜ.க ஆட்சியில் தொடரும் சட்டவிரோத பணப் புழக்கம் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை துணையுடன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஆண்டிற்கு ரூபாய் 1,800 கோடி அளவிற்கு சூதாட்டம் நடைபெறுவதாக, ஆளும் அரசின் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க பகிரங்கமாக குற்றம்ச்சாட்டியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்ததில் இருந்தே வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா விற்பனை, விபச்சாரம், கொலை, கொள்ளை என பல்வேறு சட்டவிரோத செயல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாக, எதிர்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது ஆளும் அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பகிரங்கமாக குற்றம்ச்சாட்டியுள்ளது.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் மனமகிழ்வு மன்றம் என அரசிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதாகவும், ஏனாம் பிராந்தியத்தில் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவிற்கு சூதாட்டம் நடைபெறுகிறது.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,800 கோடிக்கு மேல் சூதாட்டத்தில் பணம் புழங்குவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய அவர், இதை புதுச்சேரி அரசு வேடிக்கை பார்க்காமல் தடுக்க வேண்டும் என்றார். மேலும் இந்த சூதாட்டத்தில் ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட பிறமாநிலத்தை சேர்ந்த தாதாக்கள், சர்வதேச குற்றப்பிண்ணனி உள்ள மாபியா கேங்கை சேர்ந்தவர்களுக்கு ஈடுபட்டுள்ளதாகவும், ஏனாமில் மனமகிழ்வு மன்றம் நடப்பதற்கு அனுமதியளித்த அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இது குறித்து உரிய விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய அன்பழகன், இது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க ஆளும் அரசின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories