இந்தியா

“ஐ.நா சபையில் இந்தி மொழியில் அறிவிப்பு - 8 லட்சம் டாலர் நிதி அளித்த மோடி அரசு” : பின்னணி என்ன?

ஐ.நா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“ஐ.நா சபையில் இந்தி மொழியில் அறிவிப்பு - 8 லட்சம் டாலர் நிதி அளித்த மோடி அரசு” : பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது. அரசு அலுவலர்கள் மத்தியில், இந்தி பேசும் மாநிலத்தவர்களே இந்தியர்கள் என்கிற தவறான பிம்பத்தை பா.ஜ.க திட்டமிட்ட உருவாகி வருகிறது.

அரசு நிகழ்ச்சி மற்றும் அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டும் கடிதங்களை இந்தியிலேயே வெளியிட்டு மொழித் திணிப்பை தொடர்ந்து செய்துவருகிறது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தனது இந்தி திணிப்பு போக்கை நிறுத்திக்கொள்ளதா மோடி அரசு, ஐ.நா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க இந்திய அரசு சார்பில், 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை ஐ.நாவுக்கான இந்தியத்தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக ஐ.நா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“ஐ.நா சபையில் இந்தி மொழியில் அறிவிப்பு - 8 லட்சம் டாலர் நிதி அளித்த மோடி அரசு” : பின்னணி என்ன?

இதுதொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா சபையில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,. அதன் தொடர்ச்சியாக கடந்த 2018ம் ஆண்டு முதல் ஐ.நா சபையில் செய்தியகளை இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்து உலக பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி, ஐ.நா-வின் செய்திகளை வெளியிட, ஐ.நா இந்தி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு அதில் இந்தியில் மட்டும் செய்தி வெளிடப்பட்டுகிறது. ஏற்கெனவே பல லட்சம் அமெரிக்க டாலர் செலவிடப்பட்ட நிலையில், மேலும் இந்த திட்டத்தை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் டாலர் வழங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6,18,14,120.00” எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய மக்கள் உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் ஊக்குவிக்க 6.18 கோடி செலவிட்டப்பட்டுள்ளது பலரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் மோடி அரசின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories