இந்தியா

“பேரறிவாளனை நாங்கள் விடுதலை செய்யட்டுமா?” : ஒன்றிய அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம் !

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளது.

“பேரறிவாளனை நாங்கள் விடுதலை செய்யட்டுமா?” : ஒன்றிய அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தன் நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது? ஒரு வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவரை விடுதலை செய்து, இதுதொடர்பான வழக்கை ஏன் முடிந்து வைக்கக் கூடாது? பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா அல்லது நீதிமன்றம் செய்யட்டுமா?”என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து, அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் ஒன்றிய அரசின் முடிவைத் தெரிவிக்கவில்லை என்றால் நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்யும் என கூறி செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories