இந்தியா

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு.. இஸ்லாமியர் வீட்டில் நடந்த இந்து பெண்ணின் திருமணம்!

இஸ்லாமியர் வீட்டில் இந்து பெண்ணின் திருமணம் நடந்துள்ளது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு.. இஸ்லாமியர் வீட்டில் நடந்த இந்து பெண்ணின் திருமணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் சில மாநிலங்களில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களின் கடைகளுக்குத் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இப்படி வேண்டும் என்றே அமைதியாக நடத்த வேண்டிய ஊர்வலத்தைத் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா எப்போதும் வன்முறைகளுக்கு இடம் கொடுக்காது, மத நல்லிணக்கத்திற்கு எப்போது எடுத்துக்காட்டாக இருப்போம் என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அல்வால் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. இளம் பெண்ணான இவரின் தந்தை கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து உறவினர் ஒருவர் பூஜாவிற்கு, மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்துள்ளார்.

இவர்கள் திருமணம் ஏப்ரல் 22ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணம் இல்லாததால் பூஜாவின் உறவினர் ராஜேஷால் திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதை அறிந்து கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் பர்வேஸ். உடனே தனது வீட்டிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள் ராஜேஷிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, நிச்சயம் செய்யப்பட்ட தேதியிலே இஸ்லாமியர் வீட்டில் இந்து முறைப்படி பூஜாவிற்கு மகிழ்ச்சியாகத் திருமணம் நடந்துள்ளது. மேலும் பூஜாவை மணந்துகொண்டவருக்குத் தங்கச் சங்கிலியையும் இஸ்லாமிய குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories