இந்தியா

காதலிக்கு வேறு நபருடன் திருமணம்.. மரணத்தை திருமண பரிசாக கொடுப்பதாக WhatsApp Status வைத்த காதலன்!

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்கு வேறு நபருடன் திருமணம்.. மரணத்தை திருமண பரிசாக கொடுப்பதாக WhatsApp Status வைத்த காதலன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம், பலோட் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது.

இது பற்றி அறிந்து அந்த இளைஞர் கடும் மன உளைச்சலிலிருந்து இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் காதலி பிரிந்துவிட்டதாகக் கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளைஞர் தனது வீட்டு சுவரில், என் மரணம் தான், உனக்கான திருமண பரிசு என எழுதிவைத்துள்ளார். மேலும் இதை தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலிருந்துள்ளார்.

பிறகு போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றதால் காதல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories