இந்தியா

ஒன்றிய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு!

மாநில அளவில் DHAKSHA குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது.

ஒன்றிய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்ணா பல்கலைக்கழகத்தின் DHAKSHA ஆளில்லா விமானம் குழு ஒன்றிய அரசுக்கு ட்ரோன்களை தயாரித்து கொடுப்பதற்கு தேர்வாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் Aerospace துறை சார்பாக DHAKSHA தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து மாநில அளவில் DHAKSHA குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது.

ஒன்றிய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு!

இந்த நிலையில் "மேக் இன் இந்திய திட்டத்தின்" கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னை-யில் DHAKSHA குழு தேர்வாகியுள்ளது.

இதோடு ஆளில்லா விமான பாகங்கள் தயாரிப்பதற்கு சென்னையை சேர்ந்த Zuppa Geo Navigation Technologies என்ற நிருவனமும் தேர்வாகியுள்ளது.

ஆளில்லா விமானம் தயாரிப்புக்கு இந்திய முழுவதிலும் இருந்து மொத்தம் 5 நிறுவனமும், ஆளில்லா விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு 9 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளது.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழுவுக்கு ஆலோசகராக இருந்தவர் நடிகர் அஜித்குமார். ஏற்கெனவே இந்த தக்‌ஷா குழு ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று மூன்று பிரிவுகளில் வெற்றியை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories