இந்தியா

“கவரிமான் என்ற மான் வகை உண்மையிலேயே இருக்கிறதா?” : ஆய்வுப்பூர்வ தகவலைச் சொன்ன ஆர்.பாலகிருஷ்ணன்!

‘கவரிமான்’ எனப் பொதுவாகக் கூறப்படும் விலங்கு குறித்த ஆச்சரியமூட்டும் தகவலை தனது ‘Journey of Civilization' என்ற நூலில் பதிவு செய்துள்ளார் ஆர்.பாலகிருஷ்ணன்.

“கவரிமான் என்ற மான் வகை உண்மையிலேயே இருக்கிறதா?” : ஆய்வுப்பூர்வ தகவலைச் சொன்ன ஆர்.பாலகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘கவரிமான்’ எனப் பொதுவாகக் கூறப்படும் விலங்கு குறித்த ஆச்சரியமூட்டும் தகவலை தனது ‘Journey of Civilization' என்ற நூலில் பதிவு செய்துள்ளார் ஆர்.பாலகிருஷ்ணன்.

கவரிமான் மயிர் உதிர்ந்தால் உயிர்நீக்கும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்.

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை. இதுபற்றி ஆய்வறிஞர்கள் சொல்வது, அந்தக் குறளில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல.. கவரி மா எனும் மாட்டின் வகை என்பது ஆகும்.

பனி பிரதேசமான இமயமலையின் உயரமான பகுதியில் வாழும் கவரிமாவுக்கு, அதன் மயிர் கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. கவரிமாக்கள் அதன் வாழிடத்திலிருந்து கீழே வந்தால் அதன் மயிர்கள் நோயினால் உதிர்ந்து குளிரினால் இறந்துவிடும்.

இன்றைய தமிழ் நிலப்பரப்பில் காணப்படாத பனிப் பிரதேசத்தில் வாழும் விலங்கான கவரிமா, தமிழ்ச்சங்க பாடல்களிலும், திருக்குறளிலும் இடம்பெற்றுள்ளது சிந்துச்சம வெளி நாகரிகத்தின் திராவிட அடித்தளத்தை நிறுவுகிறது.

இந்தத் தகவலை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், திராவிடவியல் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதை தனது ‘Journey of Civilization' என்ற தனது நூலிலும் அவர் பதிவு செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன், தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, தமிழ்வழியில் குடிமைப் பணிகள் எழுதி முதல் முயற்சியிலேயே தமிழகத்தில் முதலிடம் பெற்று இந்திய குடிமைப்பணியில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடிகள் பெருமளவு வசிக்கும் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்.

ஒடிசா தலைமைச் செயலர், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் என பல்வேறு உயரிய பணிகளை வகித்து ஓய்வு பெற்றுள்ள ஆர்.பாலகிருஷ்ணன் வரலாற்று ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர். தற்போது ஒடிசா முதல்வரின் சிறப்பு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார்.

banner

Related Stories

Related Stories