இந்தியா

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை.. போலிஸ் குவிப்பு: முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்!

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில்  வன்முறை.. போலிஸ் குவிப்பு:  முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ச்சியாக மத மோதல்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

மேலும் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக நடந்துவந்த நிலையில், தற்போது கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் இந்துத்துவ கும்பல் மத மோதலை ஏற்படுத்த வன்முறைகளை தூண்டி வருகின்றது.

அண்மையில் கூட ராஜஸ்தானில், இஸ்லாமியர் பகுதியில் இந்துத்துவ கும்பலை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது இஸ்லாமியர்களின் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் அனுமுன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வந்த போலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் போலிஸார் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில்  வன்முறை.. போலிஸ் குவிப்பு:  முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்!

மேலும், சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு ஆயிரக்கணக்கான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 9 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதை விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து, தவறு செய்தவர்கள் மீது ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நிகழ்ந்துவரும் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க இணைந்து பாடுபடுவோம் என்று நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories