இந்தியா

“வன்முறையின் போது 15 இஸ்லாமியர்களை காப்பாற்றிய இந்து பெண்” : நெகிழ வைக்கும் மத நல்லிணக்கம் !

ராஜஸ்தானில் நடந்த வன்முறையின் போது 15 இஸ்லாமியர்களை காப்பாற்றிய துணிச்சல் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

“வன்முறையின் போது 15 இஸ்லாமியர்களை காப்பாற்றிய இந்து பெண்” : நெகிழ வைக்கும் மத நல்லிணக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் இந்து அமைப்பினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று புத்தாண்டை கொண்டாடினர்.

அப்போது, இவர்கள் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் கரொளி பகுதி வழியாக சென்றபோது, அங்கு முழக்கங்களை எழுப்பி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில், வன்முறையாக வெடித்துள்ளது. மேலும் அங்கிருந்த இஸ்லாமிய கடைகளுக்கு தீவைத்து, கடைகளை சூறையாடியுள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் மதுலிகா சிங் என்பவர் கடைக்குள் 15க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை தஞ்சம் புகுந்துள்ளனர். உடனே அவரும் அனைவரையும் உள்ளே அனுமதித்துள்ளார். மேலும் அவர்களை விரட்டி வந்தவர்களை தடுத்து நிறுத்து அவர்கள் அனைவரையும் காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”அன்றைய தினம் வெடித்த வன்முறையில் மக்கள் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது தனது கடைக்குள் தஞ்சம் அடைய வந்தவர்களை உள்ளே அனுமதித்து, கவலைப்பட வேண்டாம் என்று அவர்களிடம் கூறினேன். இவர்களை விரட்டி வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினேன். எல்லாவற்றையும் விட மனிதநேயம் பெரியது என்பதாலேயே இவர்களை நான் காப்பாற்றினேன்” என தெரிவித்துள்ளார்.

வன்முறையின் போது 15 இஸ்லாமியர்களை காப்பாற்றிய துணிச்சல் மதுலிகா சிங்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேபோல் இதே வன்முறையில் பற்றி எரிந்த வீட்டிற்குள் இருந்த குழந்தையை போலிஸார் ஒருவர் உயிரோடு காப்பாற்றிய சம்பவதும் நடந்துள்ளது. இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிய அமைந்தில் இருந்தே இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மத மோதல்களை ஏற்படுத்த தொடர்ந்து இந்துத்துவ கும்பல் முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories