இந்தியா

2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 6 கயவர்கள்: விசாரணையின் போது அதிர்ச்சியடைந்த போலிஸ்!

இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 6 கயவர்கள்: விசாரணையின் போது அதிர்ச்சியடைந்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்க்கண்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மேலும் அவரின் நண்பர்கள் 5 பேருக்கு போன் செய்து அவர்களையும் அங்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், 6 பேரும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை வழிமறித்து வலுக்கட்டியாமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து அவரது தோழிக்கும் போன் செய்து அங்கு வருமாறும் மிரட்டியுள்ளனர்.

இதனால், அந்த பெண்ணும், அவரது தோழிக்கு போன் செய்து அங்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவரின் தோழியையும் அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களை வன்கொடுமை செய்த 6 பேரில் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். இரண்டு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories