இந்தியா

“அரிய வகை உயிரினத்திற்கு பாலியல் துன்புறுத்தல் ?” : 3 வாலிபர்களின் கொடூர செயல் : விசாரணையில் போலிஸ் ஷாக்!

உடும்பை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மூன்று வாலிபர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“அரிய வகை உயிரினத்திற்கு பாலியல் துன்புறுத்தல் ?” : 3 வாலிபர்களின் கொடூர செயல் : விசாரணையில் போலிஸ் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இங்கு சந்தேகத்திற்கு இடாக மூன்று வாலிபர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். இதனால் வனத்துறை அதிகாரிகள் இவர்களை அழைத்து விசாரணை செய்தபோது மூன்று பேரும் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் என்பது தெரியந்தது.

மேலும் அவர்கள் வைத்திருந்த செல்போனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில், மூன்று பேரும் பெரிய உடும்பு ஒன்றை பாலியல் துன்புறுத்தல் செய்வதை வீடியோ எடுத்து வைத்திருந்தைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

பிறகு மூன்று வாலிபர்களையும் போலிஸார் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை உயரதிகாரி கூறுகையில், 'உடும்பை பாலியல் துன்புறுத்தல் செய்தது உறுதியானால் மூன்று பேருக்கும் 7 அண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்' என தெரிவித்துள்ளார்.

அரிய வகை விலங்கான உடும்பை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories