இந்தியா

சித்தியின் மகளிடம் சில்மிஷம்.. சகோதரியை கர்ப்பமாக்கிய சிறுவன் சிக்கியது எப்படி? நெல்லூரில் நடந்த விபரீதம்

இரண்டாவது மனைவியின் மகளை முதல் மனைவியின் மூத்த மகன் அவ்வப்போது பாலியல் ரீதியில் சீண்டி வன்புணர்வும் செய்திருக்கிறார்.

சித்தியின் மகளிடம் சில்மிஷம்.. சகோதரியை கர்ப்பமாக்கிய சிறுவன் சிக்கியது எப்படி? நெல்லூரில் நடந்த விபரீதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சித்தியின் மகளை வன்புணர்வுக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கிய சிறுவனை போலிஸார் கைது செய்திருக்கும் சம்பவம் ஆந்திராவில் நெல்லூரில் நடந்திருக்கிறது.

நெல்லூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான விவசாயியின் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வேறொருவருடன் வாழ்ந்து வருகிறது. இந்த தம்பதிக்கு பிறந்த 2 ஆண் பிள்ளைகள் விவசாயிடமே வளர்ந்து வருகின்றனர்.

முதல் மனைவி பிரிந்து சென்றதை அடுத்து விவசாயி ஏற்கெனவே மணமாகி 12 வயதில் பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை 2வதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இருவரும் சேர்ந்து எப்போதும் விவசாய நிலத்துக்கு செல்வது வழக்கம். அந்த சமயத்தில் இரண்டாவது மனைவியின் மகளை முதல் மனைவியின் மூத்த மகன் அவ்வப்போது பாலியல் ரீதியில் சீண்டி வன்புணர்வும் செய்திருக்கிறார்.

இதன் காரணமாக அந்த 12 வயது சிறுமி கர்ப்பாமியிருக்கிறார். இதனை குடும்பமே சேர்ந்து மூடி மறைத்திருக்கிறது. இந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

சிறுமி மைனராக இருப்பதாக சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலிஸாருக்கும், குழந்தைகள நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் மேற்குறிப்பிட்ட விவகாரம் வெளியே வந்திருக்கிறது.

இதனையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த விவசாயியின் மைனர் மகன் மீது வழக்குப்பதிந்த போலிஸார் அவனை கைது செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories