இந்தியா

அரசின் ட்விட்டர் கணக்குகளை குறிவைத்து தாக்கும் ஹேக்கர்கள்... 2 நாளில் 3 ட்விட்டர் பக்கங்கள் ஹேக்!

இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

அரசின் ட்விட்டர் கணக்குகளை குறிவைத்து தாக்கும் ஹேக்கர்கள்... 2 நாளில் 3 ட்விட்டர் பக்கங்கள் ஹேக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆத்தியநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை நேற்று மர்ம நபர்கள் ஹேக் செய்திருந்த நிலையில் இன்று இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பக்கத்தை ஹேக் செய்த உடன் அர்த்தமற்ற பகுதிவுகளை வெளியிட்டு அதை பல்வேறு நபர்களுக்கு டேக் செய்துள்ளனர். மேலும் அந்தப் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றி Azuki என்ற கார்ட்டூன் படத்தை வைத்துள்ளனர்.

இதனை அறிந்த UGC தொழில்நட்ப வல்லுநர்கள் சிறிது நேரத்திலேயே ஹேக்கர்களிடமி இருந்து பக்கத்தை மீட்டுள்ளனர். இருப்பினும் ஹேக் செய்யப்பட்டUGC பக்கத்தின் முகப்புப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக அரசுக்குச் சொந்தமான ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பக்கம், தற்போது UGC ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories