இந்தியா

“உடல் எடையை குறைத்தால் பாதி சம்பளத்தை போனஸாக தரேன்” - ஊழியர்களுக்கு எனர்ஜி டாஸ்க் கொடுத்த CEO!

உடல் பருமனை குறைத்தால் போனஸ் தருவதாக ஆன்லைன் புரோக்கிங் நிறுவனம் சவால் விடுத்து அறிவித்துள்ளது.

“உடல் எடையை குறைத்தால் பாதி சம்பளத்தை போனஸாக தரேன்” - ஊழியர்களுக்கு எனர்ஜி டாஸ்க் கொடுத்த CEO!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் ஆன்லைன் புரோக்கிங், ட்ரேடிங் நிறுவனமான ஜெரோதாவின் (Zerodha) நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான நிகில் காமத்தின் ட்விட்டர் பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், தனது நிறுவன ஊழியர்களின் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்காக புதிதாக சுகாதார திட்டத்தை வகுத்திருப்பதாகவும், அதனை கடைப்பிடித்தால் சம்பளத்தில் பாதி போனஸாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25க்கும் குறைவாக இருக்கும் ஊழியர்களுக்கு அரை மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சராசரியாக 25.3 ஆக BMIல் ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 24க்கு கீழ் தங்களது BMI-ஐ கொண்டு வந்தால் நிச்சயம் போனஸ் உண்டு எனவும் அறிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இந்த முயற்சியை உங்கள் நிறுவனத்திலும் தொடங்க எண்ணினால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிதின் காமத், ஆகஸ்ட் மாதத்திற்குள் உடல் நிறை குறியீட்டெண்ணை குறைத்தாலோ, அதிகளவில் BMIல் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் நிதின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories