இந்தியா

#இந்தி_தெரியாது_போடா மீண்டும் twitterல் trending... அமித்ஷா செய்த வேலையால் அலறும் பா.ஜ.க IT Wing!

அமித்ஷாவின் பேச்சு மீண்டும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருவது பா.ஜ.க ஐ.டி விங்கை கதிகலங்கச் செய்துள்ளது.

#இந்தி_தெரியாது_போடா மீண்டும் twitterல் trending... அமித்ஷா செய்த வேலையால் அலறும் பா.ஜ.க IT Wing!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சு மீண்டும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருவது பா.ஜ.க ஐ.டி விங்கை கதிகலங்கச் செய்துள்ளது.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க தலைமை தொடர்ந்து செய்கிறது.” எனக் கடுமையாகச் சாடினார்.

மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி #இந்தி_தெரியாது_போடா #StopHindiImposition ஆகிய ஹேஷ்டேக்குகள் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

பா.ஜ.கவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகள் எழுந்து வரும் நிலையில், அமித்ஷாவின் பேச்சு மீண்டும் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருவது பா.ஜ.க ஐ.டி விங்கை கதிகலங்கச் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories