இந்தியா

“சார்.. நைட்ல தூக்கம் வரமாட்டுது” : போலிஸாரிடம் வினோத புகார் அளித்த வாலிபர் - நடந்தது என்ன?

இரவில் தூக்கம் வரவில்லை என கர்நாடகாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

“சார்.. நைட்ல தூக்கம் வரமாட்டுது” : போலிஸாரிடம் வினோத புகார் அளித்த வாலிபர் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரய்யா ஹிரேமட். வாலிபரான இவர் கடந்த சில நாட்களாக இரவில் தூக்கம் வராமல் தவித்து வந்துள்ளார். மேலும் இரவு நேரத்தில் உடல் வலி ஏற்பட்டு வந்துள்ளது.

இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் தனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள் என நினைத்துள்ளார். மேலும் ஜோதிடர் ஒருவரையும் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஹிரேமட், எனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளார்கள். அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் அவரிடம் மன நல மருத்துவரைச் சென்று பாருங்கள் என அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். இரவில் தூக்கம் வரவில்லை என கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories