இந்தியா

தனக்கு நேர்ந்த கொடுமையால் ஆத்திரம்.. சிறுவனை வன்கொடுமை செய்து HIV பரப்பிய பெண்!

சிறுவனை வன்கொடுமை செய்த எச்.ஐ.வி பாதித்த பெண்ணை போலிஸார் கைது செய்தனர்.

தனக்கு நேர்ந்த கொடுமையால் ஆத்திரம்.. சிறுவனை வன்கொடுமை செய்து HIV பரப்பிய பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு அவரது கணவன் மூலம் HIV தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர், இந்த கொடிய நோயால் அவதிப்பட்ட அந்தப் பெண் தனது கணவரின் அண்ணன் குடும்பத்தை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து துக்க நிகழ்விற்கு வந்த அண்ணன் குடும்பதின் 15 வயது சிறுவனை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.

பிறகு அண்ணன் கிராமத்திற்கு சென்று அங்கும் சிறுவனை வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அச்சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அந்த பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவனுக்கு HIV தொற்று பரவியுள்ளதா என சிறுவனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பழிவாங்கும் நோக்கில் ஒன்றுமறியதா சிறுவனுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories