இந்தியா

ரூ.12,000 பணத்திற்காக பெற்ற மகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தந்தை.. பட்டப்பகலில் கொடூரம்!

கர்நாடகாவில் 12 ஆயிரம் பணம் தொலைத்த காரணத்திற்காக தந்தையே பெற்ற மகன் மீது பெட்ரோல் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.12,000 பணத்திற்காக பெற்ற மகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தந்தை.. பட்டப்பகலில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் டி.ஜே ஹள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆசாத் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா. இவரது மகன் அர்பித் என்பவர் கடந்த வாரம் 12 ஆயிரம் பணத்தை தொலைத்து விட்டார்.

இதனால் தந்தை மகன் ஆகியோருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம், பணத்தைக் கேட்டு தந்தை சுரேந்திரா மீண்டும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரத்தில் இருந்த சுரேந்திரா, வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மகன் மீது ஊற்றி பட்டப்பகலில் தீ வைத்துள்ளார். இதில் தீப்பற்றிய நிலையில் அலறி அடித்து ஓடிய அர்பித்தை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் தீக்காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அர்பித் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சாம்ராஜ்பேட்டை போலிஸார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சுரேந்திராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.12 ஆயிரம் பணத்தை தொலைத்த காரணத்திற்காக தந்தையே பெற்ற மகன் மீது பெட்ரோல் வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories