இந்தியா

ஃபோன் பாத்தது குத்தமா? -டெல்லியில் சாலையில் இருந்த போலிஸை குத்தி தூக்கி வீசிவிட்டு நடுரோட்டில் நின்ற காளை

சாலையில் இருந்த போலிஸார் ஒருவரை காளை ஒன்று குத்தி வீசி எறியும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஃபோன் பாத்தது குத்தமா? -டெல்லியில் சாலையில் இருந்த போலிஸை குத்தி தூக்கி வீசிவிட்டு நடுரோட்டில் நின்ற காளை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்கள் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்படும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது. அதேபோல வாகனங்கள் மட்டுமல்லாது சாலையோரம் நடந்து செல்பவர்களும் கால்நடைகளின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அந்த வகையில் சாலையில் இருந்த போலிஸார் ஒருவரை காளை ஒன்று குத்தி வீசி எறியும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் டெல்லியில் உள்ள தயால்புர் பகுதியில் கடந்த வியாழன் அன்று நடைபெற்றிருக்கிறது.

சாலையை கடந்து வந்து தனது செல்போனை பார்த்துக்கொண்டிருந்த டெல்லி போலிஸான கியான் சிங் ஷெர்பூரை அவ்வழியே வந்த காளை அவரை பின்னால் இருந்து குத்தி தூக்கி வீசியிருக்கிறது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார் என டெல்லி செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெட்டவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் போலிஸாரை காளை தூக்கி வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான காட்சிகள் அப்பக்குதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories