இந்தியா

“கேஸ் விலை உயர்வுக்கு காரணம் என்ன? - சிலிண்டர் மானியத்தை ஏன் நீக்கியது?” : மோடி அரசின் சதி அம்பலம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

“கேஸ் விலை உயர்வுக்கு காரணம் என்ன? - சிலிண்டர் மானியத்தை ஏன் நீக்கியது?” : மோடி அரசின் சதி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாட் வரியை ஒன்றிய அரசு குறைத்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை சற்று குறைந்தது. இதையடுத்து உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மக்களை உறுப்பினர் ராகுல் காந்தி, தேர்தல் முடிந்துவிட்டது பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என ஒன்றிய அரசை விமர்சித்திருந்தார். பொது மக்களும் எப்போது விலை உயரக்கூடும் என்ற அச்சத்திலேயே இருந்துவந்தனர்.

கடந்த 137 நாட்களுக்கு பிறகு தற்போது பெட்ரோல், டீசல் விலை தினசரி 76 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், நேற்று வழக்கம்போல் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப்பின், டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2,253 ஆக உள்ளது. கொல்கத்தாவில் 2,351 ரூபாய், மும்பையில் 2,087 ரூபாய், சென்னையில் 2,406 ரூபாய் என்ற அளவில் உள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக உள்ளது.

ஏற்கனவே, கடந்த மாதம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, வர்த்தக சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையை தொடர்ந்து, விமானங்களுக்கு பயன்படும் எரிபொருள் விலையையும் ஒன்றிய அரசு 2 சதவீதம் உயர்த்தியுள்ளது. வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விலையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தகைய விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதனை பார்ப்போம்:-

“கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணம் வரி அல்ல. அதன் மீது விதிக்கப்படும் மொத்த வரி 5%தான் (ஒன்றிய அரசு வரி 2.5%, மாநில அரசு வரி 2.5%). விலை உயர்வுக்கு உண்மையான காரணம் பா.ஜ.க அரசு சிலிண்டர் மானியத்தை நீக்கியதே.

2014 ஜனவரியில் கேஸ் சிலிண்டர் விலை 1100 ரூபாயை கடந்த போது அப்போதைய காங்கிரஸ் அரசு சிலிண்டருக்கு 750 ரூபாய் வரை மானியமாக மக்களுக்கு வழங்கியது. ஆகவே மக்களுக்கு சிலிண்டர் 400 ரூபாய்க்கு கிடைத்தது. ஆனால் தற்போது பாஜக அரசு அந்த மானியத்தை நிறுத்தியதால் முழுச்சுமையும் மக்கள் தலை மீது விழுந்துவிட்டது.

பாஜக அரசு சிலிண்டர் மானியத்தை ஏன் நீக்கியது?

2019ல் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 35 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக பா.ஜ.க அரசு குறைத்தது. இதன் மூலம் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி வரை வருமான இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடு கட்டவே மோடி அரசு கேஸ் சிலிண்டர் மானியத்தை நீக்கியது. அதாவது அதானியும் அம்பானியும் சொத்து சேர்க்க நாம் சிலிண்டருக்கு 1,000 ரூபாய் கொடுக்கிறோம்.” என்பது குறிப்பித்தக்கது.

banner

Related Stories

Related Stories