இந்தியா

NEET.. GST.. உள்ளிட்ட அடுக்கடுக்கான 14 கோரிக்கை.. பிரதமர் - ஒன்றிய அமைச்சர்களிடம் முதல்வர் பேசியது என்ன?

``பிரதமர் - ஒன்றிய அமைச்சர்களுடனான சந்திப்பு மன நிறைவைத் தருகிறது’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

NEET.. GST.. உள்ளிட்ட அடுக்கடுக்கான 14 கோரிக்கை.. பிரதமர் - ஒன்றிய அமைச்சர்களிடம் முதல்வர் பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுடெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி. சோனியாகாந்தி, ஒன்றிய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்தார். இதன்பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளிக்கையில், ``பிரதமர் - ஒன்றிய அமைச்சர்களுடனான சந்திப்பு மன நிறைவைத் தருகிறது’’ என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (31.3.2022) புதுடெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!

மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு நான் வருகை தந்திருக்கிறேன். முதலமைச்சராகப் பொறுப்பேற்று எனது மூன்றாவது டெல்லிப் பயணம் இது!

இந்தியப் பிரதமர் அவர்களை இன்று (31.3.2022) மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தேன். சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்த போது உடனடியாக அதற்கு நேரம் ஒதுக்கி சந்தித்தமைக்காக நான் முதலில் பிரதமர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனு மீது நடவடிக்கை; பிரதமர் மோடி உறுதி!

தமிழ்நாட்டினுடைய மிக முக்கியமான 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ( ஆநஅடிசயனேரஅ ) பிரதமரிடத்தில் நான் வழங்கினேன். அந்தக் கோரிக்கைகளில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை அவருக்கு நான் தெளிவாக எடுத்துரைத்தேன். அப்போது பொறுமையாக அனைத்தையும் கேட்ட பிரதமர் அவர்கள், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடத்தில் உறுதி அளித்திருக்கிறார்கள். பிரதமர் அவர்கள் அளித்த உறுதிமொழிக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை தற்போது இங்கு இருக்கக்கூடிய ஊடகங்கள் மூலமாகவும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பிரதமருடனான இந்தச் சந்திப்பு மகிழ்ச்சிக்குரியதாகவும், மனநிறைவை அளிப்பதாகவும் அமைந்திருந்தது. பிரதமர் அவர்களிடம் நான் அளித்த கோரிக்கை மனு ஏற்கனவே உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், குறிப்பிட்ட சில முக்கியமான கோரிக்கைகளை மட்டும் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

கோரிக்கை மனுவில் முக்கிய அம்சங்கள்!

இலங்கையில் இப்போது நடந்து வரும் அசாதாரண சூழலை நீங்கள் அறிவீர்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கி வேதனையில் தவித்துக்கொண்டிருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல, அத்தியாவசியமான பொருள்களையும் உயிர் காக்கும் மருத்துகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்கிற அந்தக் கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். அதே நேரத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அந்த கோரிக்கையையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்தும் வலியுறுத்தி இருக்கிறேன்.கச்சத்தீவு மீட்பு குறித்தும் கோரிக்கை வைத்திருக்கிறேன். தொடர்ந்து, உக்ரைனில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் மருத்துவக்கல்லூரிப் படிப்பை இந்தியாவில் தொடர அனுமதி வழங்க வேண்டும் என்றும் நான் எடுத்து வைத்திருக்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்ற அந்தக் கோரிக்கையையும் வைத்திருக்கிறேன். மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். ஜுன் 2022-க்குப் பின்பு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்கிட வேண்டும். காலணி உற்பத்தியில் பி.எல்.ஐ. திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும், டி.டி.ஐ.எஸ். திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (MMLP) ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும், சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம், பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்பட வேண்டும், ரயில் பாதை அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமருடனான சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார்.

ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை கிடைத்திட நடவடிக்கை!

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார நெருக்கடியால் அல்லலுறும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு

அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்!

தேசிய புதிய கல்விக் கொள்கை - 2020-ஐ கைவிட வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 2க்கு இந்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும், 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான இறங்குமிடமாக சென்னையை அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங் களை அறிவிக்க வேண்டும், நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை கைவிட வேண்டும், நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூடங்குளம் அணுக்கழிவுகளை மீண்டும் ரஷ்யா விற்கே எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர்களுடன் சந்திப்பு!

பின்னர் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து ஒன்றியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு!

முன்னதாக நாடாளுமன்ற வளாகத் தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனிய காந்தி அவர்களையும் சந்தித்துப் பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் கழக எம்.பி.க்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தனர்.

banner

Related Stories

Related Stories