இந்தியா

மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி: 7.36 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய அதானி.. அம்பானிக்கு எந்த இடம்?

அதானியின் சொத்து 7.36 லட்சம் கோடி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி: 7.36 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய அதானி.. அம்பானிக்கு எந்த இடம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.

ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.

இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் வெளியான அறிக்கையின் படி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14-ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகள் கவுதம் அதானிக்கு சொந்தம் என்பதால், அவரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 15,262 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதானியின் மொத்த சொத்து மதிப்பு 7.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 7.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அதானி, முகேஷ் அம்பானியை நெருங்கியுள்ளார்.

banner

Related Stories

Related Stories