இந்தியா

அனுமதியின்றி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன்.. ஆசிரியரின் கொடூர தண்டனை!

டியூஷனில் இருந்து பாதியிலேயே வெளியேறிய மாணவரை ஆசிரியர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன்.. ஆசிரியரின் கொடூர தண்டனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீலஷ் உனட்கட். பத்தாம் வகுப்பு படிக்கும் இவர் ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவன் பொதுத் தேர்வை எதிர்கொள்வதால் டியூஷனில் மாணவர்களுக்கு ஆசிரியர் சிறிய தேர்வு ஒன்றை வைத்துள்ளார்.

அப்போது தேர்வு தொடங்கும் முன் மாணவன் நீலஷ் வெளியே சென்று நீண்ட நேரம் கழித்து வந்தபோது ஆசிரியர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது மாணவன் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியே சென்றேன் எனக் கூறியும், ஆசிரியர் அடிப்பதை நிறுத்தவில்லை.

இதையடுத்து அந்த மாணவர் வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் மாணவனை தாக்கிய டியூஷன் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நீலஷ் இந்த ஆசிரியரிடம் டியூஷன் சேர்ந்துள்ளார். அதேபோல் சில தினங்களுக்கு முன்னால்தான் மாணவர் நீலஷை ஆசிரியர் கடுமையாக தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories