இந்தியா

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை..‍ மகளின் சடலத்தை 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற தந்தை ! (Viral Video)

மருத்துவமனையில் இறந்த தனது மகளின் உடலை தந்தை தோளிலேயே சுமந்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை..‍ மகளின் சடலத்தை 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற தந்தை ! (Viral Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம், ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது மகள் சுரேகா. சிறுமியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மகளை அங்குள்ள சுகாதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுவந்த நிலையில் ஆக்சிஜன் அளவு வேகமாகக் குறைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் தனது மகளின் உடலை கிராமத்திற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மற்றொரு சடலம் வந்தவுடன், இரண்டு சடலத்தைச் சேர்த்து ஒரே வண்டியில் எடுத்து சென்று விடலாம் என கூறியுள்ளனர். இதனால் சில மணி நேரம் காத்திருத்தும், ஊழியர்கள் முடிவை மாற்றிக் கொள்ளாததால், உயிரிழந்த தனது மகளின் உடலை தோளிலேயே சுமந்து கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் இப்படியே நடந்து வந்துள்ளார்.

இதைப்பார்த்த சாலையில் இருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மந்திரி சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.

வட மாநிலங்களில் மாதம் ஒரு முறையாவது இப்படியான துயர சம்பவங்கள் நடைபெறுகிறது. இதற்கு அம்மாநில அரசுகள் சுகாதாரத்துறைக்கு என்று போதுமான கட்டமைப்பை ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories