இந்தியா

சடலத்தை ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாக்கும் அவலம்.. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பிரீசர் பாக்ஸ் பழுதானதால், பிரேதங்களை ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சடலத்தை ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாக்கும் அவலம்.. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பிரீசர் பாக்ஸ் பழுதானதால், சடலங்களை ஐஸ் கட்டியில் வைத்து பாதுகாக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுபாடு, ஸ்கேன் இயந்திரம் பழுது, ஆம்புலன்ஸ் வாகனம் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏனாம் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் இருந்த குளிரூட்டு சாதனம் (பிரீசர் பாக்ஸ்) வெகு நாட்களுக்கு முன் பழுதடைந்தது.

அதனை சரி செய்யாததால், பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும் சடலங்களை ஐஸ் கட்டியின் மீது வைத்து பாதுகாத்து வருகின்றனர். அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலை குறித்து, படத்துடன் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories