இந்தியா

'The Kashmir Files' ஓடும் தியேட்டரில் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட்டு பெண்ணை அச்சுறுத்திய கும்பல்!

'The Kashmir Files' திரைப்படம் ஓடும் திரையரங்கில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு பெண்ணுக்கு ஒரு கும்பல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'The Kashmir Files' ஓடும் தியேட்டரில் ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷமிட்டு பெண்ணை அச்சுறுத்திய கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

'The Kashmir Files' திரைப்படம் முழுக்கப் பொய்களே முன்வைக்கப்படுவதாக மதச்சார்பற்ற செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், திரையரங்கில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு பெண் ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம்.

இந்தப் படம், 1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்டது எனக் கூறப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.கவினர் இந்தப் படத்தை வியந்தோதி வருகின்றனர்.

ஆனால், இந்தப்படம் ஒருதலைப்பட்சமானது என்றும், இது நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் மத மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்த முயல்கிறது என்றும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆதித்யா மாலில் உள்ள திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை தனது கணவனுடன் பார்த்த பெண் ஒருவர், கோபமடைந்து, வெறுப்புடன், வருங்காலத்தில் இது மறுபடியும் நடக்கும் என்று கத்தினார்.

படம் பார்க்க வந்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று அனைவரும் சூழ்ந்து கோஷமிட்டு அப்பெண்ணை அச்சுறுத்தினர். விபரீதத்தை உணர்ந்த அப்பெண்ணின் கணவர் அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளார்.

'The Kashmir Files' திரைப்படம் ஓடும் திரையரங்கில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்டு பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories