இந்தியா

“வரி செலுத்தலனா இனி இதான் நிலைமை” : கடைகள் முன்பு குப்பையைக் கொட்டி அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

வரி செலுத்தாத கடைகள் முன்பு ஆந்திரா நகராட்சி ஊழியர்கள் கும்பை கொட்டிய சம்பவம் வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“வரி செலுத்தலனா இனி இதான் நிலைமை” : கடைகள் முன்பு குப்பையைக் கொட்டி அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதியில் இருக்கும் கடைகளில் குப்பைகளை எடுத்துச் செல்வதற்காக மாதாமாதம் வரி கட்டணமாக ரூ.100 முதல் ரூ.500 வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்களை கடையின் உரிமையாளர்களிடம் நகராட்சி ஊழியர்கள் வசூல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று ஆந்திரா பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி ஊழியர்கள் குப்பைக்கான வரியைக் கேட்டு வந்துள்ளனர். அப்போது சில கடைக்காரர்கள் 'குப்பை எடுத்துச் செல்வதற்கு எல்லாம் வரி செலுத்த முடியாது' எனக் கூறி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த அவர்கள் பல்வேறு பகுதியில் சேகரித்து வைத்திருந்த குப்பைகளை கடைகளின் முன்பே கொட்டிவிட்டுச் சென்றனர். இந்த செயலால் கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் நகராட்சி ஊழியர்களின் இந்த அடாவடித்தனத்திற்கு வணிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பின்னர் அதிகாரிகளின் தலையீட்டிற்குப் பிறகு கொட்டிய குப்பைகளை ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories