இந்தியா

என்கவுன்டர் பயம்.. ’என்னை சுட்டுடாதீங்க’ - பதாகையுடன் பதறியடித்து காவல்நிலையம் ஓடிவந்த பிரபல ரவுடி!

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி ஒருவர் என்கவுன்டருக்கு பயந்து போலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

என்கவுன்டர் பயம்.. ’என்னை சுட்டுடாதீங்க’ - பதாகையுடன் பதறியடித்து காவல்நிலையம் ஓடிவந்த பிரபல ரவுடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் கவுதம் சிங். ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள இவரை போலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில், கவுதம் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கோழி தீவன வியாபாரி ஒருவரை சில நாட்களுக்கு முன்பு கடத்தியுள்ளனர். மேலும் இவரி விடுதலை செய்ய வேண்டும் என ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் என அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு கவுதம் சிங்கை தேடிவந்தனர். மேலும் அவர் குறித்து தகவல் கொடுக்கும் நபருக்கு ரூ. 25 ஆயிரம் பணம் பரிசாகக் கொடுக்கப்படும் என போலிஸார் அறிவித்தனர்.

இந்நிலையில், பிரபல ரவுடி கவுதம் சிங் மற்றும் அவரது சகோதரருடன் என்னை சுட்டுவிடாதீர்கள் என்ற பதாகையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories