இந்தியா

“ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல.. தடை செல்லும்” : கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என தீர்ப்பு அளித்தது.

“ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல.. தடை செல்லும்” : கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த பிப்ரவரி மாதம் பர்தா- ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகளை பந்த்ரகர்ஸ் கல்லூரி முதல்வர் வாசலில் தடுத்து நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி - கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளையில் இந்துத்வா மாணவர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஹிஜாப் அணிந்து கல்வி வளாகங்களுக்குச் செல்ல அனுமதிக்ககோரி 6 மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர், இந்த மனு மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்; ஹிஜாப் அணிவது என்பது இஸ்லாமிய மத சட்டத்தின் அத்தியாவசிய விஷயம் அல்ல என தீர்ப்பு அளித்தது.

மேலும், சீருடைக்கு மாணவ மாணவிகள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது, பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய வாய்ப்பில்லை என்றும் சீருடைகளை ஆர்டர் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது எனவே அரசின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, ஹிஜாப் என்பது மதத்தின் கொண்டாட்டம் அல்ல, எனக் கூறி, அரசு உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, ஹிஜாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கல்லூரியில் ஹிஜாப் அணிய வேண்டாம், காவியும் அணிய வேண்டாம் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories