இந்தியா

வெங்காயம், பூண்டு போட்டு சமைச்சது குத்தமா? - நொய்டாவில் மருமகள் மீது போலிஸில் புகாரளித்த மாமியார்!

நொய்டாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய மருமகள் மீது போலிஸில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெங்காயம், பூண்டு போட்டு சமைச்சது குத்தமா? - நொய்டாவில் மருமகள் மீது போலிஸில் புகாரளித்த மாமியார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமையல் செய்யும் பாத்திரங்களை அழுக்காக வைத்திருப்பதாகவும் தன்னை துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு மருமகள் மீது மாமியார் புகார் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தை அடுத்த நொய்டாவைச் சேர்ந்தவர் 80 வயதுடைய பனாரஸி தேவியின் மகன் கடந்த 2020ம் ஆண்டு மேட்ரிமோனி தளம் மூலம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிஷ்கா என்ற பெண்ணை மணந்தார்.

பனாரஸி தேவி மருமகள் ஹரிஷ்கா குறித்து போலிஸிடம் புகாரளித்துள்ளார். அதில், தனது மருமகள் தன்னை எப்போதும் துன்புறுத்துவதாகவும், சமையலில் வெங்காயத்தையும், பூண்டையும் போட்டு சமைக்கிறார்.

சமையல் அறையில் உள்ள பாத்திரங்களை அழுக்காக வைத்திருக்கிறார். மேலும், வீட்டில் இருந்த 50 கிராம் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து ரகசியமாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மருமகள் ஹர்ஷிகா மீது கடந்த 2021ம் ஆண்டே புகாரளித்த போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்போது தன்னை வீட்டில் உள்ள அறையில் வைத்து அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும் பனாரஸி தேவி புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏ.டி.சி.பி ரன்விஜய் சிங் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories