இந்தியா

வாங்கிய பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம்; சதக் சதக் என கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்; ஏனாமில் பயங்கரம்!

சீட்டு பணம் தர மறுத்த நபரை வாலிபர் ஒருவர் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

வாங்கிய பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம்; சதக் சதக் என கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்; ஏனாமில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் (52). வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த நாராயணசுவாமி (32) என்பவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தார். வெங்கடேஸ்வர ராவ் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.6 லட்சம் சீட்டு பணம் வாங்கி உள்ளார். ஆனால் சீட்டு பணம் கட்டாமல் ஏமாற்றி வந்தார்.

வாங்கிய பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம்; சதக் சதக் என கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்; ஏனாமில் பயங்கரம்!

நேற்று முன்தினம் நாராயணசாமி, வெங்கடேஸ்வராவ் வீட்டுக்கு சென்று சீட்டு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேஸ்வர ராவை சரமாரியாக குத்தினார்.

படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வர ராவ் ஏனாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். ஏனாம் காவல்துறை ஆய்வாளர் அறிவுச்செல்வம் தலைமையிலான போலிஸார் கொலை வழக்கு பதிவு செய்து, நாராயணசாமியை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த கொடூர கொலை தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories