இந்தியா

இப்படிதான் வென்றார்கள்.. வீடியோ ஆதாரத்துடன் பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த சமாஜ்வாதி வேட்பாளர்!

வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் சமாஜ்வாதி வேட்பாளர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிதான் வென்றார்கள்.. வீடியோ ஆதாரத்துடன் பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்த சமாஜ்வாதி வேட்பாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 273 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 125 இடங்களில் இடம் பிடித்து எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கான்பூரின் பில்ஹவுர் தொகுதியில் போட்டியிட்ட சாமாஜ்வாதி வேட்பாளர் ரச்சனா சிங் தனது தோல்வியை ஏற்க மறுத்து வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரின் பில்ஹவுர் தொகுதியின் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 20ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் கான்பூரில் உள்ள கல்லா மண்டி என்ற இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பிற்கு முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மர்ம நபர்கள் நுழைந்து வெளியே வரும் வீடியோ ஒன்றை ரச்சான சிங் தனது ட்விட்டரில் மார்ச் 13ம் தேதி வெளியிட்டு தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மேலும் இதற்கான ஆதாரத்துடன் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அவரின் அந்த ட்வீட்டரில், "வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்து நுழைந்த நாளில்தான் நான் தேர்தலில் தோற்றேன். எல்லா முயற்சிகளையும் செய்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதோ பெரிய சதி நடந்துள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்" என தெரிவித்துள்ளார்.

இவர் பா.ஜ.க வேட்பாளர் ராகுல் கலா பச்சா சோங்கரிடம் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories