இந்தியா

மனைவி வாயில் ஃபினாயிலை ஊற்றிய கணவன்; மும்பை அருகே பயங்கரம்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

விவாகரத்து கொடுக்க மறுத்ததால் மனைவியை கொல்ல முயன்ற நபரை மும்பை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மனைவி வாயில் ஃபினாயிலை ஊற்றிய கணவன்; மும்பை அருகே பயங்கரம்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

40 வயதுடைய நபர் ஒருவர் விவாகரத்து கொடுக்க மறுத்த தன்னுடைய மனைவியை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.

மும்பையை அடுத்த பான்வெல் பகுதியில் உள்ள ஹெடுண்டே கிராமத்தில் வசித்து வருகிறார் ஷார்தா ஜல்லா (35). கடந்த செவ்வாய் அன்று கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வற்புறுத்தி ஃபினாயில் குடிக்கச் செய்ததால் கடந்த செவ்வாய் அன்று இரவு கலம்பொலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனையடுத்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலிஸார் பாதிக்கப்பட்ட ஷார்தா ஜல்லாவின் வாக்குமூலத்தை பெற்று அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, ஜல்லா தனது கணவர் ஷிவ்சரன் மற்றும் 2 குழந்தைகளுடன் ஹெடுண்டேவில் வசித்து வருகிறார். ஜல்லாவின் கணவர் போக்குவரத்து மற்றும் கூரியர் சார்ந்த தொழில் செய்து வருகிறார்.

தனது கணவருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய பந்தம் இருப்பதை கடந்த மாதம்தான் ஷார்தா ஜல்லா அறிந்திருக்கிறார். இது தொடர்பாக ஷிவ்சரனிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து ஜல்லாவை விவாகரத்து செய்யும் முடிவுக்க வந்திருக்கிறார் ஷிவ்சரன். ஆனால் இதற்கு ஜல்லா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இப்படி இருக்கையில் கடந்த செவ்வாய் அன்று இரவு ஷிவ்சரனும் அவரது உறவினர்களும் வீட்டுக்கு வந்து மீண்டும் விவாகரத்து குறித்து பேசிய போதும் ஷார்தா ஜல்லா தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து துளியளவும் மாறாமல் இருந்திருக்கிறார்.

இப்படியாக தொடர்ந்து அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரை கொல்லும் நோக்கில் வீட்டில் இருந்த ஃபினாயிலை எடுத்து ஷிவ்சரன் ஜல்லாவின் வாயில் ஊற்றியிருக்கிறார் என போலிஸாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

ஆகவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டின்படி ஷிவ்சரணை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் பான்வெல் தாலுகா போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories