இந்தியா

ஸ்பா வைத்து பாலியல் தொழில் செய்த ஓனருக்கு காப்பு மாட்டிய தானே போலிஸ்; 3 பெண்கள் மீட்பு!

மசாஜ் பேரில் பாலியல் தொழில் செய்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்பா உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஸ்பா வைத்து பாலியல் தொழில் செய்த ஓனருக்கு காப்பு மாட்டிய தானே போலிஸ்; 3 பெண்கள் மீட்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் பகுதியில் மசாஜ் செய்யும் ஸ்பா வைத்து நடத்தி வந்தவர் ஜேம்ஸ் ஹரகம்புங் (27).

அந்த ஸ்பா நிலையில் மசாஜ் செய்யும் போர்வையில் இளம்பெண்களை வைத்து ஆண்களிடம் பணம் பறிப்பதற்காக பாலியல் தொழிலில் ஜேம்ஸ் ஈடுபட்டு வந்ததாக மகாராஷ்டிராவின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து லத்தீஃப் பார்க் அருகே இருந்த அந்த ஸ்பா நிலையத்துக்குச் சென்று சோதனை நடத்திய போது மூன்று இளம்பெண்களை மீட்ட போலிஸார் உரிமையாளர் ஜேம்ஸை கைது செய்தனர்.

மேலும் மசாஜ் நிலையத்தை பூட்டி சீல் வைத்த போலிஸார் மேற்கொண்டு விசாரணையும் நடத்தியுள்ளனர். அதன்படி, இளம்பெண்களை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வேலைகளிலும் ஜேம்ஸ் ஈடுபட இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே, இளம்பெண்களும், இளைஞர்களும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories