இந்தியா

காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்.. கம்பி எண்ணவைத்த போலிஸ் - நடந்தது என்ன?

காதலன் கண்முன்னே காதலியை வன்கொடுமை செய்த வாலிபரை போலிஸார் கைது செய்தனர்.

காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்.. கம்பி எண்ணவைத்த போலிஸ் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் நேற்று மாலை கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென இவர்களுடன் தகராறு செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தனது காதலியை அந்த இரண்டு பேரிடம் இருந்து காதலன் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அந்த இருவரும் அவரைத் தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். பின்னர் காதலன் கண்முன்னே, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் தனது சகோதரனுக்கு செல்பேசியில் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே கடற்கரைக்கு வந்து இருவரையும் மீட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவியை வன்கொடுமை செய்த நாகபாபுவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories